திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கைதிகள், திங்கள்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்டு முகாமின் கதவை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.