துறையூர்: கள்ளத்தொடர்பு.. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

துறையூர் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். வயது 32. திருமணம் ஆகாதவர். இவர் அக்கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவருடைய கணவர் மோகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில் மோகனின் உடலை மீட்ட துறையூர் காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோகனின் உறவினர்கள் அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி