துறையூர்: குண்டும் குழியுமான தார் சாலை சரி செய்ய கோரிக்கை

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரிசெட்டிபாளையம் கிராமத்தில், பெரியசாமி கோவில் செல்லும் 3 கிலோ மீட்டர் தார் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி