மணப்பாறை: பெண்ணிடம் மூன்று பவுன் செயின் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சின்னையா தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் மணப்பாறை பகுதியில் அரிசி மண்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி துர்கா தேவி இருவரும் நேற்று (டிசம்பர் 26) இரவு 9 மணி அளவில் கீழ பூசாரிப்பட்டியில் இருந்து மணப்பாறைக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். 

அப்போது திருச்சி - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை பூசாரிப்பட்டி பிரிவு சாலை அருகே இவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் துர்கா தேவி அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து மணப்பாறை போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி