திருச்சியில் கொள்ளை அடிக்கத் திட்டம் மூன்று பேர் கைது

திருச்சி பொன்மலை பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பேசிக்கொண்டிருந்தது. போலீசார் வருவதைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதில் மூவர் தப்பிச் சென்ற நிலையில், நடராஜன், மதன், பால் ராஜேஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் அப்பகுதியில் கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி