திருவெறும்பூர்: புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் கக்கன் காலனி பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி வித்யா (36), தங்கராஜ் என்பவரின் மகன் மனோஜ் குமார் (25), சுருளி கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (38), காட்டூரைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி (53) ஆகிய 4 பேர் ஆங்காங்கே தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி