துறையூர் அருகே மங்கப்பட்டி புதூரில் கட்டப்பட்ட சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், பொதுமக்களுக்கு 30% வீடுகளை ஒதுக்க வேண்டும் என்றும், 15 வருடங்களாக உள்ள குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர் தம்மம்பட்டி சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.