திருச்சியில் ரயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

இண்டர் ரயில்வே டிரான்ஸ்பரில் இடம் மாற்றத்திற்கு பதிந்து தடையில்லா சான்று பெற்ற தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், 10 சதவிகிதம் தெர்ஸ்கோல்டு முறையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி. ஆர். இ. யு. பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் நேற்று 19ஆம் தேதி பொன்மலை ஆர்மரிகேட் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பணிமனை கோட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். உதவி பொதுச் செயலாளர் சந்தான செல்வம் உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி