திருச்சி துவாக்குடி மேல தெருவைச் சேர்ந்த ராமானுஜம், சர்க்கரை நோயால் ஏற்பட்ட காயங்கள் ஆறாததால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த மூன்றாம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.