திருச்சி: சிறையில் கைதியை ஜெயிலர்கள் தாக்கியதாகப் புகார்

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியின் மகன் ஹரிஹரசுதன் (25). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 மதிப்பெண் பெற்று, சிறைக்கைதிகள் மத்தியில் முதல் இடத்தைப் பெற்றார். 

மேலும் தொழிற்பயிற்சி தொடர்பாக படிப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி, சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமையன்று அவரை, ஜெயிலர்கள் உள்ளிட்டோர் தாக்கியதாகவும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஹரிஹரசுதனின் பெற்றோர் கே.கே. நகர் போலீஸ் நிலையத்திலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்தனர். 

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு கைதி பேசிய ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்தி