உத்திரபிரதேச மாநிலம் தலைச்சென்றவர் ஜமீர் அகமது இவர் லோடு லாரி ஒன்றை திருச்சி நோக்கி ஓட்டி வந்தார். லாரி துவரங்குறிச்சி ஐஓபி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது இதில் லாரியை ஒட்டி வந்த ஜமீர் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.