திருச்சி கலைஞர் சிலைக்கு மரியாதை செய்த எம்பி சல்மா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் சல்மா கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர வட்டக் கழகச் செயலாளர்களுக்குப் பொற்கிழிகளை வழங்கி அவர் கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி