மண்ணச்சநல்லூர்: குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தை மகன் தற்கொலை

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூவராயன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தந்தை கணேசன் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கலைவாணன், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி