திருச்சி மேலப்புலிவார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவர் இப்ராஹிம் பார்க் அருகில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி கடையை பூட்டி சென்ற நிலையில் நல்லிரவு கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைத்திருந்த 50,000 ரூபாய் ரொக்கம் இரண்டு செல்போன்களை ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றார். இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை ரோடு நாதர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த திவான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.