திருச்சி கிழக்கு தொகுதி முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததிலிருந்து அங்கு யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது. கு. ப. கிருஷ்ணன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோர் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தனக்கு பதிலாக இடைத்தேர்தலில் மண்ணின் மைந்தர் ஒருவரை களம் இறக்க உள்ளதாக தெரிவித்தார். அக்கட்சியினர், அந்த நபர் கு. ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி என கூறி வருகின்றனர்.