திருச்சி திருவெறும்பூர் பகுதியில், போக்சோ வழக்கில் கைதான கேட்டரிங் மாணவன், ஜாமினில் வெளிவந்து அதே 16 வயது சிறுமிக்கு மீண்டும் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை கேட்டபோது, மாணவன் அவரை கத்தியால் குத்தியதாகத் தகவல். திருவரம்பூர் போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.