திருவரம்பூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை திங்கட்கிழமை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு, எரிவாயு சிலிண்டர் பெறுவதில் தங்களுக்குள்ள பிரச்சனைகளை முகாமில் கலந்து கொள்ளும் எரிவாயு முகவர்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

தொடர்புடைய செய்தி