திருவரம்பூர் மது பாட்டில் பதுக்கி விற்ற நான்கு பேர் கைது

திருவெறும்பூர் அருகே துவாக்குடி ரிங் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பதாக துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து நாகராஜன் தலைமையில் துவாக்குடி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாக ஓடிஸா மாநிலம் தோத்ராவைச் சேர்ந்த ரத்தன்ஹரிஹரன், பீகார் மாநிலம் சரண்சவுகான், சாக்கெட்குமார், புதுக்கோட்டை மாவட்டம் மலையரிபட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகிய நான்கு பேர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பொழுது கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி