திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே சிறுவனை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதித்ததாக, திருச்சி தனரத்தினம் நகரைச் சேர்ந்த அவனது தந்தை முகமது நிஜாமுதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.