திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இப்பகுதி மட்டுமின்றி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் 51 சுகப்பிரசவங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.