திருச்சி மலைக்கோட்டை நாகநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை நந்தி கோயில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயிலில் மாசி மக திருவிழா பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோ் திருவிழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தொடர்புடைய செய்தி