தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள், மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டும் காணாததுமாக இருந்துவந்த நிலையில், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் அலட்சிய திருவெறும்பூர் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்றைய தினம் அண்ணா தொழிற்சங்கம், பெல் மஸ்தூர் சங்கம், ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட பெல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெல்நிறுவனம் தரப்பில் ஒத்துழைப்பு தந்து, இடம் ஒதுக்கீடு செய்தும் விளம்பர திமுகவின் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாகவும் குற்றம்சாட்டினர்.