லால்குடி அருகே கீழவாளாடியில் சிந்துஜா வீட்டில் இருந்து 9 பவுன் நகை திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், சிந்துஜாவிற்கு ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்த பிரபாகரன் நகையை திருடியதை கண்டறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.