லால்குடி அருகே உள்ள கல்லக்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). சம்பவம் நடந்த நேற்று 28ஆம் தேதி அன்று கள்ளக்குடி தாப்பாய் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வந்த அசோக் லைலேண்ட் லாரி ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு பின் தலை, நெற்றி, இடது காலில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான அரியலூரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கல்லக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.