ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 8 மணிக்கு துவங்கியது. வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. அடங்காத காளைகளுக்கும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனம், டிவி, பீரோ, ட்ரெஸ்ஸிங் டேபிள், சைக்கிள், தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கம் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மாலை 4.50க்கு போட்டி நிறைவுற்றது. இதில் 13 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின்போது 87 பேர் காயமுற்றனர். 15 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு