லால்குடி அருகே ஆம்புலன்ஸ் பணியாளர்களை தாக்கிய வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். காட்டூர் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா உறவினரான அஜித்தும் அவருடன் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கௌசல்யாவை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் வரகுப்பை பகுதியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரன் அவரை ஆம்புலன்ஸில் ஏற்று செல்ல முயன்றார். அப்போது டிரைவர் மகேந்திரன் மற்றும் டெக்னீசியன் ஆகியோரை மதுபோதையில் இருந்த அஜித் தாக்கியதாக தெரிகிறது இது குறித்து புகாரின் பெரிய லால்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் அஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி