திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை காரணமாக, நாளை (8ஆம் தேதி) மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர், ஜே. கே. நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர், வீ என் நகர், தென்றல் நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டி புத்தூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், இ. பி. காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். மின்தடையால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி