திருச்சி முக்கொம்பு மேணைக்கு நீர்வரத்து 1,14,980 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் இன்று காலை 7 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 1,14,980 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 25,945 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 88,035 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்களில் 1000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.