முசிறியில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் முசிறியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முசிறி சப் கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள் 100% வாக்குப்பதிவு அவசியம் என கோஷமிட்டும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி