மணப்பாறையில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

மணப்பாறை குறிஞ்சி கல்லூரி அருகே கடந்த 17ஆம் தேதி அன்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி