திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை குஜிலியான் தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தி, சேவல் சண்டையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்குமார் மற்றும் ரகுநாத் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.