திருச்சி: பாலியல் வன்கொடுமை-யானைப் பாகனுக்கு 14 ஆண்டுகள் சிறை

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே தோப்பில் வசித்த 60 வயது மூதாட்டியின் 22 வயது மாற்றுத்திறனாளி பேத்திக்கு பாலியல் வன்கொடுமை செய்த தஞ்சாவூா் மாவட்டம், மானம்புசாவடியைச் சோ்ந்த யானைப் பாகன் ப. வினோத் (40) என்பவருக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5, 000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. கடந்த 2022 செப். 22 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி