திருச்சி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 396 மனுக்கள்..

திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (பிப்.3) நடந்தது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியது, பட்டா மாறுதல் மற்றும் நிலம் தொடர்பான மனுக்கள், சாதி சான்றுகள், இதரச் சான்றுகள் 114, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடு ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் 66, கலைஞர் உரிமை தொகை வேண்டிய மனுக்கள் 54, குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் 14, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரண தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித் தொகைகள் பெறுவது தொடர்பான மனுக்கள் 28, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு, குழாய் தொகுப்பு, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள் 22, புகார் தொடர்பான மனுக்கள் 7, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவை இயந்திரம் வேண்டிய விண்ணப்பங்கள் 12, மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள் 5, நில ஆக்கிரமிப்பு மனு 8, மருத்துவம் 4, வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 12, என மொத்தம் 396 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி