திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் பத்மநாபன், ஜங்ஷன் பகுதி கழகச் செயலாளர் நாகநாதர் பாண்டியன், மற்றும் உறையூர் பகுதி கழகச் செயலாளர் பூபதி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளர் கு. ப. கிருஷ்ணனை சந்தித்து, தங்களை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிமுகவினரும் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம், மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.