திருச்சி ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி மற்றும் ஈரோடு இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் மார்ச் 5, 7, 10, 16, 21, 22 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி