திருச்சி: ஸ்ரீரங்கம் சித்திரை வீதியில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஸ்ரீரங்கம் சித்திரை வீதியில் 'விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே சாட்சி' என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், அதிமுக ஆட்சிக் காலத்தையும் தற்போதைய திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினருக்கு கையடக்க பிரிண்டர்கள் மூலம் அச்சிடப்பட்ட துல்லியமான தகவல்களைக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி