திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் காரணம் என பாஜகவினர் வதந்தி பரப்பி பதற்றத்தை உண்டாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த அறிக்கை மதவாதிகளுக்குப் பாடமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.