தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்க தனது உயிரை பணயம் வைத்து சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் சாகத்தில் ஈடுபட்ட நபர் முசிறியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
சாலை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நிவாஸ் என்ற இளைஞர் மீது புலிவலம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.