ஸ்ரீரங்கம்: தாசில்தார் தலை துண்டித்து கொலை

ஸ்ரீரங்கம் தாசில்தாராகப் பணிபுரிந்து 2022-ல் ஓய்வு பெற்ற சுப்பிரமணியன், தாயனூரில் வசித்து வந்தார். கோவில் நில விவசாயம் மற்றும் குத்தகை பணம் தொடர்பாக அசோக்குடன் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 6) இரவு அசோக் தனது மகனுடன் சேர்ந்து சுப்பிரமணியனை தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி