முசிறி அருகே தாப்பேட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

முசிறி அருகே தாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், காது ஒலி கேட்கும் கருவி, தொழு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி, கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை, முதியோர்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி