ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நாளை நெல்லளவு கண்டருளுகிறார்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை), பெருமாள் உபயநாச்சியார்களுடன் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு, திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளி, தாயார் சன்னதியில் மாலை 6.45 மணிக்கு திருவந்திகாப்பு கண்டருளுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்து, இரவு 8.30 முதல் 9.30 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த உற்சவம் வரும் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி