ஸ்ரீரங்கம்: மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த மர்ம நபர்கள்

ஸ்ரீரங்கம் ராகவேந்திரபுரம் அருகே, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 75 வயது விஜயலட்சுமி என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மூன்று சவரன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். திகைத்துப் போன விஜயலட்சுமி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி