துறையூர் திமுக சார்பில் பாக நிலை முகவர்கள் ஆய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் தலைமையில் சொரத்தூர், குன்னுப்பட்டி , நடுவலூர், நாகலாபுரம், கீரம்பூர் ஆகிய ஊராட்சிளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் (பிஎல்ஏ2), பாக குழு உறுப்பினர்கள் (பிஎல்சி) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் கலந்து கொண்டு, 234க்கு 200 சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாக நிலை முகவர்கள், பாக குழு உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். வாக்காளர்களிடம் நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும் கேட்டுக்கொண்டார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் (முன்னாள் மாவட்ட சேர்மன்), நகர செயலாளர் மெடிக்கல் முரளி, மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் , உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி