ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று, 22 ஆம் தேதி, தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று, ஸ்ரீ ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில் பச்சை பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.