புகாரை அடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினத்தின் உத்தரவின் பேரில் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக், பாலமுருகன் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களை பறிமுதல் செய்தும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். மேலும் இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்