தொட்டியம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடை (எண்: 10367)-ஐ அகற்றக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொட்டியம் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி