ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் ஒருவர் கைது இருவர் தப்பி ஓட்டம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்ற மூன்று பேரை போலீசார் வளைத்து பிடித்தனர். அவர்களில் இருவர் தப்பிச் சென்றனர். சர்க்கார் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி