திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டு பாப்பங்குள கரையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அரவாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஜுர்னோதாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5. 30 மணிக்கு முதல் யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் யாக சாலை பூஜை, மாலையில் மூன்றாம் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளது. 24 ஆம் தேதி புதன்கிழமை காலை 9. 45 மணி முதல் 10. 46 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், மஹா கும்பாபிஷேகம் ஆராதனையும் நடைபெறும். முன்னதாக காலை 6. 30-7. 29 மணிக்குள் கோயில் தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகளை பரம்பரை பட்டையதாரர் செல்வமணி சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளார்.