அங்கு அவருக்கு வரவேற்பு, திருவாராதனங்கள் நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. இரவு வரை அங்கிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த சுந்தரராஜப்பெருமாள் இரவு 11 மணியளவில் அன்பில் புறப்பட்டார்.
அன்பில் பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், இருகோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். மாசிமகத்தையொட்டி உத்தமர்கோவில் புருஷோத்தமபெருமாள் உற்சவர் கொள்ளிடம் தென்கரை பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார்.