திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "200 இடங்கள் யாருக்கு என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் மீது தங்களுக்கு மதிப்பு இருப்பதாகவும், எந்தப் பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தேவையான நிதிகளை ஒதுக்கி வருவதாகவும், ஆனால் ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக அரசு வேறு துறைக்கு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி